NELLAI RAMANUJAM
என்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை; என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை; என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை; என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை; என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை; ஆகையால், என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
Sunday, May 27, 2012
வாழ்க்கை என்னும் பேருந்து
எங்கள் தாத்தாவிடம் ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை எங்கள் ஊரில்.
எங்கள் மரியாதை மிக்க மாமாவின் எதிரே நாங்கள் உட்கார்ந்து பேசியதில்லை.
எனது பெரியம்மாவின் மீது உள்ள பாசத்தால் கல்யாணமே வேண்டாம் என்றான் என் பங்காளி.
தனது மூத்த பிள்ளை மீது உள்ள பாசத்தால் இன்னொரு பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை என் நண்பன்.
மனைவின் முகம் பார்த்தே தினமும் காலையில் எழுவார் என் சித்தப்பா.
இத்துணை முக்கியத்துவமான நபர்கள் இன்று இந்த மண்ணில் இல்லை.
ஆனால் எதுவும் நின்று போய்விடவில்லை; யாரும் உடைந்து போய்விடவில்லை.
நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு இயல்பாக பயணிக்கிறது வாழ்க்கை என்னும் பேருந்து.
ஒரே பேருந்தில் பயணித்தாலும், அனைவரது இறங்கும் இடமும் ஒன்றல்ல.
இறங்கும் இடம் சொல்லி பயண சீட்டை வாங்குவதில்லை பயணிகள்
பயணிகள் இறங்கும் இடத்தை நடத்துனரே தீர்மானிக்கிறார் இந்த பேருந்தில்.
பேருந்தின் வேகத்தை ஒட்டுனரே தீர்மானிக்கிறார்.
இதில் தனது பேருந்து வேகமாய் செல்வதாய் சில பயணிகளுக்கு மகிழ்ச்சி.
மேலும் சிலர், தனது இருக்கையை விலை பேசுகிறார்.
இன்னமும் சிலர் பேருந்தை முழுவதும் விலை பேசுகிறார்.
பாவம் அவர்களுக்கு தெரியாது அடுத்த நிறுத்தம் அவர்கள் இறங்கும் இடம் என்று.
Friday, November 11, 2011
பாவம்
Thursday, January 6, 2011
Saturday, December 25, 2010
Monday, December 6, 2010
ஆலயம் சென்று இறைவனை வழிபட தேவை இல்லை எனக்கு.
நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அமர்ந்து வழிபட்டு கொள்வேன்.
அறையில் குளிப்பதை விட ஆற்றில் குளிப்பது பிடிக்கும் எனக்கு
ஆற்றில் குளிப்பதை விட மழையில் நனைவது பிடிக்கும் எனக்கு
என் உடம்பின் கழிவுகள் நீங்கி விட்டால்
காற்றில் கலந்துள்ள நீரில் நனைத்து கொள்வேன் என் உடம்பை.
Sunday, July 4, 2010
நிழல் பின்னே நாய் போல
நான் பிறந்த நேரம் காலை 5:45.
தொடர்ந்து ஓடிகொண்டிருக்கிறது கடிகாரம்
அதன் பின்னே நானும் ஓடிகொண்டிருக்கிறேன்
"நிழல் பின்னே ஓடும் நாய் போலே".
கல்லூரி காலம் முடிந்தது.
கல்லூரியின் வெற்றியும் தோல்வியும்
வாழ்க்கையோடு சம்மந்தப்படவில்லை.
கல்லூரியோடு என் காதலும் முடிந்தது
நான் நேசித்த பெண் என் வாழ்க்கையில் வரவில்லை.
திருமணம் நடந்தது பெற்றறோரின் நிச்சயப்பு.
ஆம்! காமம் தான் காதல் தோல்விக்கு மருந்து.
காமத்துடன் வாழ்க்கையை துவக்கினேன் என் மனைவியுடன்.
சூரியன் கிழக்கில் இருந்து உச்சிக்கு வர வர
பனி உருகி மலை தெரிவது போல ;
வயது ஏற ஏற காமம் கரைந்து அன்பு மிஞ்சியது இருவரிடமும்.
பொறுப்புகள், பிள்ளைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், நோய்கள் .
என்னை விட தாமதமாக உலகத்திற்கு வந்தாலும்
சரியாக என்னை போலவே என் பிள்ளைகள்
நிழல் பின்னே ஓடும் நாய்களாய்.
இதோ விரிக்கப்படிருக்கிறது மரண படுக்கை.
சாய்ந்து விட்டேன் அதன் மேலே
நெருங்கி விட்டது மரணம்.
சிந்தனைகள் பலவாறு வந்து போகிறது மனதில்.
எனது பெற்றோர்கள் தாங்கள் மலடல்ல என நீருபித்து கொண்டது "நான்".
எனது காமத்திற்கு தீனி தேடிய போது வந்து போனது என் "காதல்".
ஆனால் அதற்க்கு தீனி இட்டது என் வாழ்க்கை துணை "திருமணம்".
வாழ்க்கை முழுவதும் எனது பசிக்கு உணவு தேட முயன்றது என் "அறிவு".
நானும் மலடல்ல என சமுதாயத்திற்கு காட்டி கொண்டது என் "பிள்ளைகள்".
உடல் தளர தளர மனம் தளர்ந்த போது
துணைக்கு தேவை பட்டது மனிதர்கள் "பாசம்".
இதோ பிரிய போகிறது என் உயிர் ,
உணவிற்கும், காமத்திற்கும், புகழிற்கும் மட்டுமே வாழ்ந்து முடித்து விட்டேன் .
இல்லை ஓடி முடித்து விட்டேன்.
ஓவ்வொரு மனிதனும் இதற்க்காகவே
இன்னமும் ஓடிகொண்டிருக்கிறான் .
அல்லது ஓடிமுடித்து விட்டான் .
அல்லது ஓட போகிறான்
இதோ எனக்கு பேரன் பிறந்து விட்டதாய் செய்தி
நேரம் மாலை 6:15.
இன்று இரவு எனது மரணம்
நாளையும் அதே விடியல் .
தொடர்ந்து ஓடிகொண்டிருக்கிறது கடிகாரம்
அதன் பின்னே நானும் ஓடிகொண்டிருக்கிறேன்
"நிழல் பின்னே ஓடும் நாய் போலே".
கல்லூரி காலம் முடிந்தது.
கல்லூரியின் வெற்றியும் தோல்வியும்
வாழ்க்கையோடு சம்மந்தப்படவில்லை.
கல்லூரியோடு என் காதலும் முடிந்தது
நான் நேசித்த பெண் என் வாழ்க்கையில் வரவில்லை.
திருமணம் நடந்தது பெற்றறோரின் நிச்சயப்பு.
ஆம்! காமம் தான் காதல் தோல்விக்கு மருந்து.
காமத்துடன் வாழ்க்கையை துவக்கினேன் என் மனைவியுடன்.
சூரியன் கிழக்கில் இருந்து உச்சிக்கு வர வர
பனி உருகி மலை தெரிவது போல ;
வயது ஏற ஏற காமம் கரைந்து அன்பு மிஞ்சியது இருவரிடமும்.
பொறுப்புகள், பிள்ளைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், நோய்கள் .
என்னை விட தாமதமாக உலகத்திற்கு வந்தாலும்
சரியாக என்னை போலவே என் பிள்ளைகள்
நிழல் பின்னே ஓடும் நாய்களாய்.
இதோ விரிக்கப்படிருக்கிறது மரண படுக்கை.
சாய்ந்து விட்டேன் அதன் மேலே
நெருங்கி விட்டது மரணம்.
சிந்தனைகள் பலவாறு வந்து போகிறது மனதில்.
எனது பெற்றோர்கள் தாங்கள் மலடல்ல என நீருபித்து கொண்டது "நான்".
எனது காமத்திற்கு தீனி தேடிய போது வந்து போனது என் "காதல்".
ஆனால் அதற்க்கு தீனி இட்டது என் வாழ்க்கை துணை "திருமணம்".
வாழ்க்கை முழுவதும் எனது பசிக்கு உணவு தேட முயன்றது என் "அறிவு".
நானும் மலடல்ல என சமுதாயத்திற்கு காட்டி கொண்டது என் "பிள்ளைகள்".
உடல் தளர தளர மனம் தளர்ந்த போது
துணைக்கு தேவை பட்டது மனிதர்கள் "பாசம்".
இதோ பிரிய போகிறது என் உயிர் ,
உணவிற்கும், காமத்திற்கும், புகழிற்கும் மட்டுமே வாழ்ந்து முடித்து விட்டேன் .
இல்லை ஓடி முடித்து விட்டேன்.
ஓவ்வொரு மனிதனும் இதற்க்காகவே
இன்னமும் ஓடிகொண்டிருக்கிறான் .
அல்லது ஓடிமுடித்து விட்டான் .
அல்லது ஓட போகிறான்
இதோ எனக்கு பேரன் பிறந்து விட்டதாய் செய்தி
நேரம் மாலை 6:15.
இன்று இரவு எனது மரணம்
நாளையும் அதே விடியல் .
Wednesday, May 12, 2010
சலசலப்பு
Subscribe to:
Posts (Atom)