Saturday, January 31, 2009

விடுதலை பத்திரிக்கை தலையங்கத்தில் வெளிவந்த கிழ்கண்ட கருத்தை கோடிட்டு காட்டிய தமிழ் காவியா அவர்களுக்கு எனது பதில்.

அன்புள்ள பகுத்தறிவுவாதிக்கு,
உங்கள் கடவுள் எதிர்ப்பு கருத்துகளை படித்தேன்.
ராம சேன அமைப்பினர் நடந்துகொண்ட விதம் கண்டிக்கதக்கதுதான்.
ஆனால் மனிதனின் செயலுக்கு கடவுளை இழுப்பது தவறு.
"முட்டைஇல் இருந்து கோழி வந்ததா; இல்லை கோழிஇல் இருந்து முட்டை வந்ததா " என்பது போல கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது.
எந்த ஒரு நம்பிகையையும் அல்லது கருத்தையும் இல்லை என்பது எளிது. உண்டு என நிருபிப்பது கடினம். உருவ வழிபாடு வேண்டுமனாலும் நம்பக தன்மை இல்லாமல் இருந்த போதிலும்; ஒரு மேலான சக்தி உண்டு என்பதில் அனைவருக்கும் நம்பிகை உண்டு. அது புவிருப்பு விசையாக இருந்தாலும் சரி; எதுவகினாலும் சரி. உண்டு என நிருபிக்கும் வரை அல்லது குறைந்த பட்சம் உணரும் வரை, இல்லை என பேசுவது எளிது.
இங்கே உருவ வழிபாடு கூட மனதை ஓருமுக படுத்ததான். பெரியார் மூட நம்பிக்கைக்கு தான் எதிரியாக இருந்தார் என்பது என் கருத்து. கடவுள் என்னும் சக்திக்கு இல்லை. புராண படைபாளர்களை நீங்கள் விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் அது கடவுளை விமர்சிப்பதாக எடுத்து கொள்ள முடியாது.
அன்புடன்,
ச. ராமானுசம்

இந்து மதக் கடவுள்களில் ஆபாசங்கள்தான் கொஞ்சமா? நஞ்சமா?

கலாச்சாரக் காவலர்களா இவர்கள்?
கருநாடக மாநிலம் மங்களூரில் அம்னீசியா லவுஞ்ச் ஹோம் என்ற உணவுவிடுதியிருக்கிறது. அந்த விடுதியில் ஆபாச நடனம் நடைபெறுகிறது என்று கூறிசிறீ ராமசேனா என்னும் இந்து மதவெறி அமைப்பினைச் (புரொமோத் முடாலிக்என்பவரைத் தலைமையாகக் கொண்டது) சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்கள்விடுதியின் உள்ளே புகுந்து பெண்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.அங்கிருந்த பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டுமிருக்கின்றனர்.
இந்த வன்முறை நடவடிக்கையைப் பெண்கள் அமைப்புகளும், பல்வேறு பொதுஅமைப்புகளும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.
இந்த அமைப்பு பாரதீய ஜனதாவிலிருந்து பிரிந்து தனியாக நடை போட்டாலும்அடிப்படையில் இந்துத்துவா பேசும் வெறியர்கள்தாம்.
மகாராட்டிரத்தில் சிவசேனா என்ற அமைப்பு எப்படி செயல்படுகிறதோ அதேபோலமாநில வெறி உணர்வோடும், இந்துத்துவா வெறியோடும் அனல் கக்கும் மதவெறிக்கும்பல் அது.
ஆபாசமாக நடனம் ஆடினார்கள் என்று சமாதானம் சொல்லக்கூடும்.அப்படியேயிருந்தாலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சண்டியர்த்தனம்செய்ய இவர்களுக்கு உரிமை ஏது? காவல்துறையிடம் புகார் கொடுத்து நடவடிக்கைஎடுக்கச் செய்திருக்கலாமே!
தீபா மேத்தா வாட்டர் என்ற திரைப்படம் எடுத்தபோதுகூட உத்தரப்பிரதேசத்தில்இந்துத்துவா கும்பல் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டு படப்பிடிப்புசம்பந்தமான அத்தனைக் கருவிகளையும் நாசப்படுத்தியதை நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
உ.பி.யிலிருந்து இடத்தை மாற்றி கொல்கத்தா செல்ல அவர்கள் திட்டமிட்டபோது,எங்கு சென்றாலும் கல்லால் அடிப்போம் என்று கத்திய காட்டுவிலங்காண்டிக்கூட்டம்தான் இது.
இதே கருநாடக மாநிலத்தில் பெங்களூருக்கு அருகே ஆனெகல் என்ற இடத்தில்சமுதாய நாடகக் குழுவினர் நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது பெங்களூருமாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர் எம். நாகராஜ் தலைமையில் காவிக் கும்பல்உள்ளே நுழைந்து கடுமையாகக் கலைஞர்களைத் தாக்கியதுண்டு (1.5.1999).
சென்னையில் பாரதியார் நினைவு இல்லத்தில் கவிதைத் திருவிழாநடத்தப்பட்டபோதும்கூட இந்து வெறியர்கள் தடிகளுடன் உள்ளே புகுந்துகவிஞர்களைத் தாக்கியதுடன் தந்தை பெரியார், லெனின், அண்ணல் அம்பேத்கர்ஆகியோரின் நூல்களைக் கிழித்து எறிந்தனரே! (1998 செப்டம்பர் 13).
பாசிஸ்டுகள் எப்பொழுதும் தங்களுக்கு எதிர்மறையான கலாச்சாரத்தை அனுமதிக்கவே மாட்டார்கள்.
ஆபாசத்தின்மீது அவர்களுக்கு உண்மையிலே வெறுப்பு இருக்குமானால், முதலில்இவர்கள் செல்லவேண்டிய இடம் உணவு விடுதிகள் அல்ல - நாடக அரங்குகளும் அல்ல.முதலில் இவர்கள் நுழையவேண்டிய இடம் இந்து மதக் கோயில்களுக்குள் - இந்துமதத்தின் தேர்களையெல்லாம் தீயிட்டுக் கொளுத்தவேண்டும், கோபுரங்களைஇடித்துத் தரைமட்ட மாக்கவேண்டும்.
கற்பனைக்கெட்டாத காட்டுவிலங்காண்டிகள் கூடக் கண்களை மூடிக்கொள்ளும்அளவுக்கு ஆண் - பெண் உறவுகளைக் கேவலப்படுத்தும் சிற்பங்கள், சித்திரங்கள்அங்கெல்லாம் பச்சைப் பச்சையாகத் தீட்டப்பட்டு இருக்க வில்லையா?
கம்ப இராமாயணத்தில் சீதையின் உடலை கம்பன் வருணித்ததுபோல வேறு யாராவதுவருணித்தது உண்டா?
இந்து மதக் கடவுள்களில் ஆபாசங்கள்தான் கொஞ்சமா? நஞ்சமா? பார்வதிக்கும்,சிவனுக்கும் நடந்த கல்யாணத்தில்கூட புரோகிதனாகயிருந்த பிரம்மா,பார்வதியின் தொடையைப் பார்த்து இந்திரியம் கசிந்தான் என்பதைவிடக் கேவலம்வேறு எங்கு உண்டு?
தம் முதுகு நிறைய அழுக்குகளை மூட்டை மூட்டையாகச் சுமந்து கொண்டு,அடுத்தவன் நகத்தில் அழுக்கு என்று ஆர்ப்பாட்டம் போடுவது யாரை ஏமாற்ற?
வன்முறைமூலம் எதையும் சாதிக்கலாம் என்பது எப்பொழுதும் அவர்கள் கைவசம்வைத்திருக்கும் வழிமுறை யாகும். அதுவும் அவர்களின் ஆட்சி நடக்குமேயானால்,காவல் துறையே இவர்களாக மாறி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித்தீர்த்துவிடுவார்கள்.
கருநாடக மாநிலக் காவல்துறை 17 பேர்களைக் கைது செய்துள்ளது உண்மைதான்என்றாலும், பொது மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் சித்து விளையாட்டாகஅது இருக்கக் கூடாது. உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உண்மையானமுறையில் வழக்கை நடத்தவேண்டியது அவசியமாகும்.
-----------------------நன்றி:-"விடுதலை" தலையங்கம்- 27-1-2009

Friday, January 30, 2009

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - முத்துகுமரன்

தூதுத்தூகுடியின் சிறப்பாம் முத்தையும், தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாம் குமரனையும் தன் பெயரில் கொண்ட ஒரு நிஜமான தன்மான தமிழன் தனது/நமது மொழியுணர்வுக்காக, இனஉணர்வுக்காக தன் உயிரயே தியாகம் செய்துள்ளார்.
"தற்கொலை - கோழைகள் எடுக்கும் வீரமான முடிவு" என்பது ஒரு கருத்து.

இங்கே ஒரு வீரன் எடுத்திருக்கிறார் கோழையான முடிவு.
கோழையான முடிவா?


இது கோழையான முடிவா? தெரியவிலை. இதைவிட அவர் வேறு எந்த முடிவை எடுத்திருந்தால், தமிழ் இனபடுகொலை நிறுத்தபட்டிருக்கும் ? காலகாலமாக ஈழதமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்திருக்கும் அரசியல் தலைவர்களால் என்ன சாதிக்க முடித்திருக்கிறது? திரைநட்சத்திரம், மாணவர்கள் மற்றும் பல அமைப்புகளின் உண்ணாவிரத போராட்டங்கள் மீடியாக்களூக்கு செய்தியை தவிர என்ன விளைவை பெற்று தர முடிந்தது. அதற்கு மத்யஅரசு என்ன செவி சாய்த்து எனபது நம் எல்லாரும் அறிந்த ஒன்று. இடைதேர்தலில் வெற்றிபெற ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொண்ட முயற்சிகளில் பாதியையாவது ஈழதமிழனின் இனபடுகொலையில் எடுத்திருந்தால் எத்தனையோ கொலைகள் அங்கே தடுக்கபட்டிருகும். இந்திய சட்டம் நமக்கு சாதகமா இல்லை என்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதனால் மனிசனுக்கு மனிதனால் உரூவாக்கப்பட்டதே சட்டம். ஒரு சட்டம் அடுத்த தெருவில் வசிக்கும் நமது சம இனம் அழிவதை பார்த்து உமையாக இருக்கிறது, இனஉணர்வை அழிக்கிறது, மொழி உணர்வை அழிக்கிறது என்றால் அது வழக்கொழிந்து போகவேண்டிய சட்டம். அது உணர்வற்ற அரக்கர்களால் மனிதனுக்கு உருவாக்கபட்ட அல்லது திணிக்கப்பட்ட சட்டம். அந்த சட்டத்திற்கு பயந்துகொண்டு சாப்பாட்டில் புளிகூட சேர்க்காமல் இருப்பவர்கள் மத்யில், தன் உயிரையே அர்ப்பணித்த ஒரு தமிழனின் செயல் எனக்கு கோழைத்தனமாக தெரியவில்லை. எடுத்துக்கொண்ட கருவி வேறுபட்டாலும் முத்துகுமரன் வாஞ்சினாதனாகத்தான் தெரிகிரார். ஏனென்றால் "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்". அந்த தமிழ், அந்த , இனம் உலகத்தின் எந்த ஒரு முலையில் அழிகப்படும்பொழுதும் அதை பார்த்துக்கொண்டு எந்த ஒரு தமிழனும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழமுடியாது.
இந்த தமிழ்த்தாய் குமரனின் உயிரே தமிழின படுகொலைக்கு முற்றுபுள்ளியாக இருக்கட்டும்.
முத்துக்குமார !! நீ இறந்தும் வாழ்கின்றாய் !!

நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்கள் !!
உனக்கு உன் சகோதரனின் அஞ்சலி !!!

Thursday, January 29, 2009

அவள் அப்படித்தான் !!

அவள் அப்படித்தான் !!
ஏங்க...
என்ன...
பக்கத்து சீட்டுக்காரன் என்னையே உத்துபார்த்துகிட்டு இருக்கான்...வாங்க பின்னாடி சீட்டு காலியா இருக்கு ..அங்க போயிரலாம்"
இந்தபாரு பஸ்ன்னு வந்தா...நாலு பேரு பார்க்கதான் செய்வான்..அதுக்கெலாம் பயந்துகிட்டு இடம்பாத்தனும்னா ..பஸ்சுக்கு பின்னாடி ஏணிய பிடிச்சிகிட்டு தொங்கிகிட்டுதான் வரணும்..பேசாம இங்கேயே உட்காறு " என்று அதட்டினேன்.
அவள் கண்களில் நீர்வழிய தொடங்கியது.

இந்த பாரு கல்யாணி ...இன்னமும் பழையகாலத்து பொண்ணுக மாதிரி இருக்க கூடாது. இந்த மாதிரி சின்ன சின்ன விசயதுக்கெல்லாம் பயந்துகிட்டு இருந்தா உன்னை மாதிரி பொண்ணுக வெளிய எங்கயும் போகமுடியாது. நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்னு நீ ஒரு பாரதி கண்ட புதுமை பெண்ணா இருக்கனும்கிறதுதான் என் ஆசை. இந்த மாதிரி சுதந்திரம் கொடுக்குற கணவன் கிடைக்க நீ கொடுத்து வெய்சிருக்கனும் புரிதா " எனேறன்.
நான் சொன்னா கோவிச்சிக்கிட மாட்டிங்களே.. ..
சொல்லு..
பாரதி ஆசைப்பட மட்டும்தான் செய்தார்..அவர் சொன்ன மாதிரி அவரால் செல்லம்மாவைகூட மாத்த முடியலை. என்னை என்னை மாதிரியே வாழ விடுங்க..அதுதான் நீங்க எனக்கு கொடுக்கிற சுதந்திரம் .
எழுந்து வேறு இருக்கைக்கு இருவரும் சென்றோம்.