Friday, January 30, 2009

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - முத்துகுமரன்

தூதுத்தூகுடியின் சிறப்பாம் முத்தையும், தமிழர்களின் தனிப்பெரும் கடவுளாம் குமரனையும் தன் பெயரில் கொண்ட ஒரு நிஜமான தன்மான தமிழன் தனது/நமது மொழியுணர்வுக்காக, இனஉணர்வுக்காக தன் உயிரயே தியாகம் செய்துள்ளார்.
"தற்கொலை - கோழைகள் எடுக்கும் வீரமான முடிவு" என்பது ஒரு கருத்து.

இங்கே ஒரு வீரன் எடுத்திருக்கிறார் கோழையான முடிவு.
கோழையான முடிவா?


இது கோழையான முடிவா? தெரியவிலை. இதைவிட அவர் வேறு எந்த முடிவை எடுத்திருந்தால், தமிழ் இனபடுகொலை நிறுத்தபட்டிருக்கும் ? காலகாலமாக ஈழதமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்திருக்கும் அரசியல் தலைவர்களால் என்ன சாதிக்க முடித்திருக்கிறது? திரைநட்சத்திரம், மாணவர்கள் மற்றும் பல அமைப்புகளின் உண்ணாவிரத போராட்டங்கள் மீடியாக்களூக்கு செய்தியை தவிர என்ன விளைவை பெற்று தர முடிந்தது. அதற்கு மத்யஅரசு என்ன செவி சாய்த்து எனபது நம் எல்லாரும் அறிந்த ஒன்று. இடைதேர்தலில் வெற்றிபெற ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொண்ட முயற்சிகளில் பாதியையாவது ஈழதமிழனின் இனபடுகொலையில் எடுத்திருந்தால் எத்தனையோ கொலைகள் அங்கே தடுக்கபட்டிருகும். இந்திய சட்டம் நமக்கு சாதகமா இல்லை என்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதனால் மனிசனுக்கு மனிதனால் உரூவாக்கப்பட்டதே சட்டம். ஒரு சட்டம் அடுத்த தெருவில் வசிக்கும் நமது சம இனம் அழிவதை பார்த்து உமையாக இருக்கிறது, இனஉணர்வை அழிக்கிறது, மொழி உணர்வை அழிக்கிறது என்றால் அது வழக்கொழிந்து போகவேண்டிய சட்டம். அது உணர்வற்ற அரக்கர்களால் மனிதனுக்கு உருவாக்கபட்ட அல்லது திணிக்கப்பட்ட சட்டம். அந்த சட்டத்திற்கு பயந்துகொண்டு சாப்பாட்டில் புளிகூட சேர்க்காமல் இருப்பவர்கள் மத்யில், தன் உயிரையே அர்ப்பணித்த ஒரு தமிழனின் செயல் எனக்கு கோழைத்தனமாக தெரியவில்லை. எடுத்துக்கொண்ட கருவி வேறுபட்டாலும் முத்துகுமரன் வாஞ்சினாதனாகத்தான் தெரிகிரார். ஏனென்றால் "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்". அந்த தமிழ், அந்த , இனம் உலகத்தின் எந்த ஒரு முலையில் அழிகப்படும்பொழுதும் அதை பார்த்துக்கொண்டு எந்த ஒரு தமிழனும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழமுடியாது.
இந்த தமிழ்த்தாய் குமரனின் உயிரே தமிழின படுகொலைக்கு முற்றுபுள்ளியாக இருக்கட்டும்.
முத்துக்குமார !! நீ இறந்தும் வாழ்கின்றாய் !!

நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்கள் !!
உனக்கு உன் சகோதரனின் அஞ்சலி !!!

No comments:

Post a Comment