Thursday, January 29, 2009

அவள் அப்படித்தான் !!

அவள் அப்படித்தான் !!
ஏங்க...
என்ன...
பக்கத்து சீட்டுக்காரன் என்னையே உத்துபார்த்துகிட்டு இருக்கான்...வாங்க பின்னாடி சீட்டு காலியா இருக்கு ..அங்க போயிரலாம்"
இந்தபாரு பஸ்ன்னு வந்தா...நாலு பேரு பார்க்கதான் செய்வான்..அதுக்கெலாம் பயந்துகிட்டு இடம்பாத்தனும்னா ..பஸ்சுக்கு பின்னாடி ஏணிய பிடிச்சிகிட்டு தொங்கிகிட்டுதான் வரணும்..பேசாம இங்கேயே உட்காறு " என்று அதட்டினேன்.
அவள் கண்களில் நீர்வழிய தொடங்கியது.

இந்த பாரு கல்யாணி ...இன்னமும் பழையகாலத்து பொண்ணுக மாதிரி இருக்க கூடாது. இந்த மாதிரி சின்ன சின்ன விசயதுக்கெல்லாம் பயந்துகிட்டு இருந்தா உன்னை மாதிரி பொண்ணுக வெளிய எங்கயும் போகமுடியாது. நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்னு நீ ஒரு பாரதி கண்ட புதுமை பெண்ணா இருக்கனும்கிறதுதான் என் ஆசை. இந்த மாதிரி சுதந்திரம் கொடுக்குற கணவன் கிடைக்க நீ கொடுத்து வெய்சிருக்கனும் புரிதா " எனேறன்.
நான் சொன்னா கோவிச்சிக்கிட மாட்டிங்களே.. ..
சொல்லு..
பாரதி ஆசைப்பட மட்டும்தான் செய்தார்..அவர் சொன்ன மாதிரி அவரால் செல்லம்மாவைகூட மாத்த முடியலை. என்னை என்னை மாதிரியே வாழ விடுங்க..அதுதான் நீங்க எனக்கு கொடுக்கிற சுதந்திரம் .
எழுந்து வேறு இருக்கைக்கு இருவரும் சென்றோம்.

1 comment:

  1. //என்னை என்னை மாதிரியே வாழ விடுங்க..அதுதான் நீங்க எனக்கு கொடுக்கிற சுதந்திரம் //

    உண்மையான சுதந்திரம் நபருக்கு நபர் மாறுபடும் என்பதுதான் உண்மை..
    அன்புடன் அருணா

    ReplyDelete