Sunday, April 5, 2009

எனது வாழ்வு இரவில் மட்டும்

இரவு எனக்கு அமைதியை தருகிறது.

இரவு எனக்கு வானத்தை காட்டுகிறது.

இரவு எனக்கு குளிர்ச்சியை தருகிறது.

இரவு எனது குழந்தையை காட்டுகிறது.

இரவு என் மனைவியின் மனதை காட்டுகிறது.

இரவு எனக்கு கலவியை தருகிறது.

இரவு என் உடம்பை சுத்தம் செய்கிறது.

இரவு எனக்கு தற்காலிக மரணத்தை தருகிறது.

இரவு எனக்கு மறுபிறப்பை தருகிறது.

இரவு என்னை எனக்கு காட்டுகிறது.

வெளிச்சத்தில் தெரியும் பகல் என் வாழ்வின் போலி.

இருட்டில் தெரியும் இரவு என் வாழ்வின் நிஜம்.

2 comments:

 1. வெளிச்சத்தில் தெரியும் பகல் என் வாழ்வின் போலி.

  இருட்டில் தெரியும் இரவு என் வாழ்வின் நிஜம்.

  arumai

  ReplyDelete
 2. வெளிச்சத்தில் தெரியும் பகல் என் வாழ்வின் போலி.


  இருட்டில் தெரியும் இரவு என் வாழ்வின் நிஜம்.

  அருமை

  ReplyDelete