Saturday, April 11, 2009

என்னை ஏன் மணந்தாய் என் தலைவா ???

என் தலைவா !!! உன்னை காணாமல்

பசலை நோய் வரவில்லை...

வளையல் கை நழுவி ஓடவில்லை......

சோலைவனம் பாலைவனம் ஆகவில்லை...

என் கனவில் எப்போதும் நீ வரவில்லை....

நீ அனுப்பும் பணக்கட்டுகளும் மகிழ்ச்சி தரவில்லை....

ஆடிக்கு என்னை அழைத்து போக என்அம்மாவும் வரவில்லை....

உன்னை பற்றி விசாரிப்பவர்களிடம் பதில் சொல்ல மனமில்லை...

திருமணம் முடிந்து முதல் ஒருமாதம் நீ முகம் கொடுத்து பேசவில்லை...

மறுமாதம் உன் பெருமை பற்றியை சிலாகித்தாய்...

மூன்றாம் மாதம் மூன்றடி பெட்டியுடன் பறந்து விட்டாய் அயல்தேசம்...

வருடமும் ஓடி விட்டது இன்றோடு.

ஏனோ! உன் தாலி கூட என் கழுத்தை உறுத்துகிறது இரவெல்லாம்.....

மனதை விட என் உடலுக்கு துணை தேடுகிறது இப்போது.

என் உடல் திரியில் நீ காமத்தீ ஏற்றி விட்டு சென்று விட்டாய்....

எனனயே நினைத்து இன்னமும் ஏங்கும் அவன்

அதற்க்கு எண்ணை ஆகி விடுவானோ என்ற பயம் உயிர் கொல்கிறது.

என்னை அலங்கரிக்க வேண்டாம்! என் தலைவா!!

சீக்கிரம் வந்து என்னை அணைத்து கொள்.

நீ காலம் தாழ்த்தி வரும் முன்பு ...

நானும் அவனும் காற்றில் கலந்திருப்போம்.

எஞ்சிய கரியை நீ பூசிக்கொள் உன் முகத்தில்.

நீ கொண்டுவரும் டாலர்களை குவித்தாலும்

மீண்டும் திரியாகாது கரி.

6 comments:

  1. அருமையான கவிதை. மனைவியை பிரிந்து வெளிநாட்டில் பொருள் தேட செல்கிறவர்களுக்கு நல்ல சவுக்கடி.

    ReplyDelete
  2. எனது தோழிக்கு இந்த கவிதை பிடிக்கவில்லை....

    பெண்களுக்கு இந்த கவிதை பிடிக்காது என்பது அவர்களின் கருத்து.

    கடையம் ஆனந்த் அவர்களுக்கு எனது நன்றி.

    ReplyDelete
  3. ஏனோ! உன் தாலி கூட என் கழுத்தை உறுத்துகிறது இரவெல்லாம்.....

    மனதை விட என் உடலுக்கு துணை தேடுகிறது இப்போது.

    என் உடல் திரியில் நீ காமத்தீ ஏற்றி விட்டு சென்று விட்டாய்....

    எனனயே நினைத்து இன்னமும் ஏங்கும் அவன்

    அதற்க்கு எண்ணை ஆகி விடுவானோ என்ற பயம் உயிர் கொல்கிறது.

    என்னை அலங்கரிக்க வேண்டாம்! என் தலைவா!!

    சீக்கிரம் வந்து என்னை அணைத்து கொள்.

    நீ காலம் தாழ்த்தி வரும் முன்பு ...

    நானும் அவனும் காற்றில் கலந்திருப்போம்.

    எஞ்சிய கரியை நீ பூசிக்கொள் உன் முகத்தில்.

    நீ கொண்டுவரும் டாலர்களை குவித்தாலும்

    மீண்டும் திரியாகாது கரி.

    அருமையான கவிதை. மனைவியை பிரிந்து வெளிநாட்டில் பொருள் தேட செல்கிறவர்களுக்கு நல்ல சவுக்கடி.

    எல்லோரும் அப்படி இல்லை
    என்பது என் கருத்து.
    என்னுடைய கவிதை
    காத்திருக்கும் காதலியின்
    மனவேதனை ....

    ReplyDelete
  4. கண்டிப்பாக எல்லாரும் அப்படி இல்லை.

    இது இந்த பெண்ணிண் நியாயமான விசும்பல்..

    காமனோடு தினமும் அவள் சண்டை இட்டதில் வந்த உயிர் பயம்.

    பதிபக்தி என்னும் போர்வையால் இதை மறைத்து விட முடியாது.

    சந்திக்கும் முன்பு காமம் ஒரு புரியாத புதிர்.

    சந்தித்த பின்பு காமம் தினமும் தாக்கும் புயல்.

    அந்த பெண்ணின் சுழ்நிலை அவளை அவ்வாறு பயம் கொள்ள செய்திருக்கிறது.

    ReplyDelete
  5. சுடுதே..

    ReplyDelete