Saturday, May 30, 2009

அட பொழப்ப கெடுத்த பொட்டபுள்ள !!


நடு சாமத்து ஊத காத்தில்
உறக்கம் கலஞ்ச நீ
கொலுசொலி எழுப்பி என்னை அலைச்சய
ஏத்தா?

அம்மூரு சொக்கனாச்சியம்மன் கொடையில
ஆத்தா காபாத்துன்னு கண்மூடி நா கிடக்க
கோயில் வாசலோரம் நட்ட வாழமரத்து காய்பிடுங்கி
என் மேல விட்டெறுஞ்சி என் கவனம் கலச்சியே
ஏத்தா?

சிவனேன்னு குளிச்சிட்டு
ஒத்தையடி ஆத்தங்கரையில
ஈர வேட்டியை உலத்திகிட்டு நா வரையில
ஆத்துல கல் எரிஞ்சி என் மேனி நனைச்சியே
ஏத்தா?

கரும்பு காட்டுகுள்ள
பூச்சி பொட்டு பட்டுரும்ன்னு
கவனமா தண்ணி பாக்கையில
தலை நிறைய பூ வச்சி
என்னை இழுத்து உன் தனம் மேல போட்டயே
ஏத்தா?

கண்ணாலம் முன்னால கை வைச்சா தப்புன்னு
இரவைக்கு தோட்ட காவலுக்கு நான் போக
பின்னாலையே வந்து
உன் தவாணியில பாய் விரிச்சியே
ஏத்தா?

உச்சி வெயிலு மண்டைய பொளக்குதுன்னு
அம்மூரு சுடுகாட்டு ஆலமரத்துகடியில
ஆட்டோட உன் நினைப்பில் நா கிடக்க
அரவமில்லாம அசலுரூ மாப்பிள்ளை கூட
குலுங்குற கூண்டு வண்டியில
உன் உசிரை குலுங்காம புடிச்சிகிட்டு
குனிச்ச தல நிமிராம
குணவதியா போறியே
ஏத்தா?

4 comments:

  1. அருமையான வட்டார மொழி கவிதை

    வாழ்த்துக்கள் ராமானுஜம்

    ReplyDelete
  2. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி சக்தி அவர்களே !!!

    ReplyDelete
  3. அருமை கவிதை நண்பா
    அடிக்கடி வலைப்பக்கம் வாங்க நண்பா

    ReplyDelete