Wednesday, December 30, 2009

ஜென் தத்துவ விளக்க கதைகள்"


இந்த ஆண்டு பாலகுமாரனின் "காதலாகி கனிந்து" தவிர வேறு எந்த புத்தஹத்தையும் நான் முழுமையாய் படித்ததை எனக்கு தெரியவில்லை. வேறு எந்த சப்பை காரணமும் சொல்லி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் நான் சாப்பிடாமல் இல்லையே? இதோ எடுத்துவிட்டேன் நர்மதா பதிப்பகம் வெளயிட்ட தேவ்நாத் எழுதிய "ஜென் தத்துவ விளக்க கதைகள்". தினமும் இரண்டு பக்கமாவது படித்து அதில் என்னை கவர்ந்த கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.

ஆசிரியரின் முன்னுரை:

மனிதர்கள் மூன்று வகை:

1.இருட்டில் உழன்று அதையே பழக்கபடுத்தி கொண்டவர்கள்.

2.என்றேனும் வெளிச்சம் வராதா என்று காத்து கொண்டு இருப்பவர்கள்.

3.வெளிச்சத்தை நோக்கி நடப்பவர்கள்.

இம்முன்று வகையெனரும் இந்த புத்தகத்தின் மூலம் வெளிச்சத்தை பெறலாம் என்று முழுமையாக நம்பலாம்.

மேலும் ஒரு அருமையான கவிதை “தாமரை இலை தண்ணீர்” என்ற தலைப்பில்:

பிறவிக்கடலில் ஓடுகிறது
வாழ்க்கை படகு, அதில்
ஏற்றப்பட்ட சரக்குகள் இரண்டு
“உண்டு” “இல்லை”, ஆனால்
உடைந்து போன படகில்
இரண்டுமே ஒன்றுதான்.

(தொடருவோம்)

நாத்திக குழந்தைகள்

குழந்தை இயேசுவை கண்டு "பாப்பா" என்றும்;
சிவபெருமான் படம் பார்த்து "மாமா" என்றும்;
அடையாளம் காட்டியது என் நாத்திக குழந்தை.
அதட்டியவாறு அது ஆண்டவன் என்றேன் அதனிடம்.
அலட்டிக்கொள்லாமல் அம்மாவின் மடியில் படுத்துகொண்டது.
எனது அறிவு எழுந்து கொண்டது.
அணைத்து மதத்திலும் பிறக்கும் குழந்தைகள் நாத்திகர்௧ளே;
கலங்கிய மனிதர்களின் காற்று படாதவரை .
ஐயோ ! நாத்திக சமுதாயம் உறுவாக நான் காரணியாகி விடகூடாது.
குழந்தையின் நெற்றில் திருநீறு இட்டு கண்மூடி கடவுளை வணங்கி கொண்டேன் .
மீண்டும் என் அறிவு படுத்துவிட்டதா? காஞ்சிபுரம் பெருமாளுக்கே வெளிச்சம் .

Thursday, December 10, 2009

பறவையே எங்கு இருக்கிறாய் ?




என் மரத்தில்
நீ வசித்து சென்ற
௬டு மட்டும் தான் இப்பொழுது.
அதில் நீ உதிர்த்து சென்ற
வெண்பஞ்சு சிறகுகள்
மற்றும் எச்சங்களின் பாரம் தாங்காமல்
எப்பொழுது சரியுமோ?
என் மரம்.

ஆனால், உனது சாலையில்
எனது இரத்தகரைகள் மட்டுமே இப்பொழுது.
நீ கடந்து செல்லும் வேகத்தில் அதை பார்க்க௬ட
நேரமில்லை உனக்கு

மீண்டும் பின்னோக்கி பயணிக்க
கால இயந்திரம் இல்லை எனக்கு
இன்னமும் முன்னோக்கி சென்று சாவைதொட
கால சுதந்திரம் இல்லை எனக்கு
என்னோடு சேர்ந்துவாழ ஏனோ மனம் இல்லை உனக்கு.

இங்கே நானும்,
பறவை பிரிந்து சென்ற பறவை ௬டும்
ஏனோ இருந்து கொண்டு இருக்கிறோம்
பிறர் பார்வைக்கு.

Thursday, December 3, 2009

கள்ள காதல்

சமுகமே !!!
இனி மேல் சொல்லாதிர்கள் " கள்ள காதல் " என்று.
வேண்டுமானால் சொல்லிகொள்ளுங்கள் முதல் காதல் என்று.
அல்லது உண்மையான காதல் என்று.
எங்கே நான் காதலித்தேன் என் வாழ்க்கை துணையை.
நீங்களாக நினைத்துக்கொண்டால் நான் அல்ல பொறுப்பு.