Sunday, June 21, 2009

தாய்மையா? தாயா?


பள்ளி ஆண்டு விழாவில்,
இறைவன் எனும் நான்கெழத்து பற்றியான
கவிதை போட்டியில் அவன் எழுதிய இரண்டெழத்து கவிதை
தாய்.
நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்கள் பெற்றோருடன் வந்திருக்க
இவனது தாயோ சிறையில்
விபச்சார வழக்கின்கிழ்.

Saturday, June 6, 2009

இளம் விதவை

உன்னை இழந்து
உன் நினைவிலும், காமத்திலும்
நான் படும் வேதனைகள்
நித்தமும் உடன்கட்டை எனக்கு.

வானம் பார்த்த வீட்டுகாரி

(கள்ள தொடர்பில் கருவுற்ற நடை பாதையில் வாழும் பெண் ஒருத்தி, பிறக்க போகும் தன் குழந்தையை நோக்கி கூறுவது)

நாங்கள் ஒருவரை ஒருவர் இரையாக்கி உண்டதில்
தோன்றிய என் அடிவயிற் று ஜீரணமே !
இனி நீ பூமியில் படப்போகும் வேதனைகளை பட்டியலிடுவேன் கேள்.

நான் அடி வயிறில் ஜீரணித்ததை விட
மேல் வயிறில் ஜீரணித்தது குறைவுதான்
ஆகையால், என் முலையில் நீ வாய்வைத்து உறிஞ்சினால் ஊறப்போவதென்னவோ உன் வாயின் எச்சில் மட்டுமே
சுவைக்காக என் மார்பில் காய்ந்த வியர்வையை அதில் கலந்து கொள்.

இப்பொழுது கிடைத்து கொண்டிருக்கும் ஒருவேளை உணவுக்கும் நாளை உத்திரவாதமில்லை.
உன் அக்காளின் தந்தையை போல்
இப்பொழுது உன்னை எனில் ஊட்டியவனும் ஓடிவிடகூடும்.
பின்பு, கோவில்படிகட்டுகளும் சாலைசந்திபுகளும் நம் தொழில்கூடமாக மாறிவிடக்கூடும்.

மழை பெய்தால் நனைய பழகிகொள்
வெயில் அடித்தால் காய பழகிகொள்
குளிரடித்தால் நடுங்கி கொள்
ஆனால், பசி எடுத்தால் மட்டும் அடக்கிகொள்

நிலவை பார்த்து உறங்கிகொள்
கதிரை பார்த்து விழித்துகொள்
ஏதோ ஒரு விடியலில் இருந்து, உன்னருகே நான் இருக்கபோவதில்லை.

ஆணாக பிறந்து விட்டால், உணவு விடுதியின் எச்சில் சேற்றிலும்
வாகனப் பழுது பார்க்கும் கடைகளில் எண்ணையிலும் அமிழ்ந்து போவாய்.
பெண்ணாக பிறந்து விட்டால், வயது வரும் முன்பே
வயதுக்கு வரவழைக்க படுவாய்.

இதை அனுபவிக்கதானா,என் வயற்றில் துடிப்புடன் காத்திருக்கிறாய்
காம தீயில் பிரிந்த என் சுடரே !

உன் பிஞ்சு கால்களால் என் அடிவயற்றில் உத்தரவிடு இப்பொழுதே.
ஜிரணித்திருந்தாலும் வலுகட்டாயமாக உன்னை வாந்தி எடுத்து விடுகிறேன்.