Sunday, February 15, 2009

பதில் இல்லாத கேள்வி


ஆதாரம் இல்லாத உலகம்.
அதில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் மனம்.
கிழ்வானம் சிவக்கும்;
மேல்வானம் கருக்கும்;
காலங்கள் ஓடிவிடும் கணம்.
அதில் உன் காம தேகங்கள் கூட கரைந்து விடும்.
எங்கிருந்து வந்தாய்?
ஏன் வந்தாய்?
என்ன செய்கிறாய்?
எங்கே போகிறாய்?
தெரியவில்லை உனக்கும் எனக்கும்.
கடவுள் என்பர் சிலர் காவி நிறத்துடன்.
கடமை என்பர் சிலர் கருப்பு நிறத்துடன்.
இருவரும் கலந்து நிற்பார் கல்லறை காட்டில்.
தாய் என்பர்; தந்தை என்பர்;
தாரம் என்பர்; என் தலைவர் என்பர்.
யாரும் வருவதில்லை உன்னோடு.
கானல் நீராய்தான் இங்கே உறவுகள்.
அதில் தாகம் தீர்க்க நினைக்கும் உன் நினைவுகள்.
கேட்டிருப்பாய் ஒரு பழைய பழமொழி.
" நாய்க்கு வேலை இல்லை; அதற்க்கு நிற்க நேரம் இல்லை" என்று.
வந்த வேலை தெரியாமல் , நிற்க நேரம் இல்லாமல் அலைகிறாய்.
சுற்றுகின்ற உலகில் நின்று கொண்டிருப்பதாய் நினைக்கும் பேதை மனிதா !!!
பசிக்கு சமைக்கிறாய் , உணர்ச்சிக்கு மணக்கிறாய்.
இந்த உண்மையை உள்ளம் ஏற்க மறுக்கும்.
உள்ளுர பயம் பிறக்கும்.
மனிதா !!! புரிந்து கொள்.
நீ ஒரு பதில் இல்லாத கேள்வி.
மூடுக்கி விடப்பட்ட பொம்மை.
முதலும் முடிவும் தெரியாத அகதி.

2 comments:

  1. யாரும் வருவதில்லை உன்னோடு.
    கானல் நீராய்தான் இங்கே உறவுகள்
    உமையான கருத்து .

    நீ ஒரு பதில் இல்லாத கேள்வி

    எப்படியாவது பதில் கண்டுபிடித்து
    சொல்லுங்க

    ReplyDelete
  2. \\நீ ஒரு பதில் இல்லாத கேள்வி.
    மூடுக்கி விடப்பட்ட பொம்மை.
    முதலும் முடிவும் தெரியாத அகதி.\\

    அகதி :(

    ReplyDelete