நான் பிறந்த நேரம் காலை 5:45.
தொடர்ந்து ஓடிகொண்டிருக்கிறது கடிகாரம்
அதன் பின்னே நானும் ஓடிகொண்டிருக்கிறேன்
"நிழல் பின்னே ஓடும் நாய் போலே".
கல்லூரி காலம் முடிந்தது.
கல்லூரியின் வெற்றியும் தோல்வியும்
வாழ்க்கையோடு சம்மந்தப்படவில்லை.
கல்லூரியோடு என் காதலும் முடிந்தது
நான் நேசித்த பெண் என் வாழ்க்கையில் வரவில்லை.
திருமணம் நடந்தது பெற்றறோரின் நிச்சயப்பு.
ஆம்! காமம் தான் காதல் தோல்விக்கு மருந்து.
காமத்துடன் வாழ்க்கையை துவக்கினேன் என் மனைவியுடன்.
சூரியன் கிழக்கில் இருந்து உச்சிக்கு வர வர
பனி உருகி மலை தெரிவது போல ;
வயது ஏற ஏற காமம் கரைந்து அன்பு மிஞ்சியது இருவரிடமும்.
பொறுப்புகள், பிள்ளைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், நோய்கள் .
என்னை விட தாமதமாக உலகத்திற்கு வந்தாலும்
சரியாக என்னை போலவே என் பிள்ளைகள்
நிழல் பின்னே ஓடும் நாய்களாய்.
இதோ விரிக்கப்படிருக்கிறது மரண படுக்கை.
சாய்ந்து விட்டேன் அதன் மேலே
நெருங்கி விட்டது மரணம்.
சிந்தனைகள் பலவாறு வந்து போகிறது மனதில்.
எனது பெற்றோர்கள் தாங்கள் மலடல்ல என நீருபித்து கொண்டது "நான்".
எனது காமத்திற்கு தீனி தேடிய போது வந்து போனது என் "காதல்".
ஆனால் அதற்க்கு தீனி இட்டது என் வாழ்க்கை துணை "திருமணம்".
வாழ்க்கை முழுவதும் எனது பசிக்கு உணவு தேட முயன்றது என் "அறிவு".
நானும் மலடல்ல என சமுதாயத்திற்கு காட்டி கொண்டது என் "பிள்ளைகள்".
உடல் தளர தளர மனம் தளர்ந்த போது
துணைக்கு தேவை பட்டது மனிதர்கள் "பாசம்".
இதோ பிரிய போகிறது என் உயிர் ,
உணவிற்கும், காமத்திற்கும், புகழிற்கும் மட்டுமே வாழ்ந்து முடித்து விட்டேன் .
இல்லை ஓடி முடித்து விட்டேன்.
ஓவ்வொரு மனிதனும் இதற்க்காகவே
இன்னமும் ஓடிகொண்டிருக்கிறான் .
அல்லது ஓடிமுடித்து விட்டான் .
அல்லது ஓட போகிறான்
இதோ எனக்கு பேரன் பிறந்து விட்டதாய் செய்தி
நேரம் மாலை 6:15.
இன்று இரவு எனது மரணம்
நாளையும் அதே விடியல் .