Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, November 11, 2011

பாவம்



வந்து சென்றதின் அடையாளமாய்

எவ்வளவு உதறி தள்ளியும்

வீடுவரை வந்து விடுகிறது

கடற்கரையின் மணல் துகள்கள்;

விலை மாதுவிடம் பெற்ற பாவத்தை போல.

Sunday, July 4, 2010

நிழல் பின்னே நாய் போல

நான் பிறந்த நேரம் காலை 5:45.
தொடர்ந்து ஓடிகொண்டிருக்கிறது கடிகாரம்
அதன் பின்னே நானும் ஓடிகொண்டிருக்கிறேன்
"நிழல் பின்னே ஓடும் நாய் போலே".
கல்லூரி காலம் முடிந்தது.
கல்லூரியின் வெற்றியும் தோல்வியும்
வாழ்க்கையோடு சம்மந்தப்படவில்லை.
கல்லூரியோடு என் காதலும் முடிந்தது
நான் நேசித்த பெண் என் வாழ்க்கையில் வரவில்லை.
திருமணம் நடந்தது பெற்றறோரின் நிச்சயப்பு.
ஆம்! காமம் தான் காதல் தோல்விக்கு மருந்து.
காமத்துடன் வாழ்க்கையை துவக்கினேன் என் மனைவியுடன்.
சூரியன் கிழக்கில் இருந்து உச்சிக்கு வர வர
பனி உருகி மலை தெரிவது போல ;
வயது ஏற ஏற காமம் கரைந்து அன்பு மிஞ்சியது இருவரிடமும்.
பொறுப்புகள், பிள்ளைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள், நோய்கள் .
என்னை விட தாமதமாக உலகத்திற்கு வந்தாலும்
சரியாக என்னை போலவே என் பிள்ளைகள்
நிழல் பின்னே ஓடும் நாய்களாய்.
இதோ விரிக்கப்படிருக்கிறது மரண படுக்கை.
சாய்ந்து விட்டேன் அதன் மேலே
நெருங்கி விட்டது மரணம்.
சிந்தனைகள் பலவாறு வந்து போகிறது மனதில்.
எனது பெற்றோர்கள் தாங்கள் மலடல்ல என நீருபித்து கொண்டது "நான்".
எனது காமத்திற்கு தீனி தேடிய போது வந்து போனது என் "காதல்".
ஆனால் அதற்க்கு தீனி இட்டது என் வாழ்க்கை துணை "திருமணம்".
வாழ்க்கை முழுவதும் எனது பசிக்கு உணவு தேட முயன்றது என் "அறிவு".
நானும் மலடல்ல என சமுதாயத்திற்கு காட்டி கொண்டது என் "பிள்ளைகள்".
உடல் தளர தளர மனம் தளர்ந்த போது
துணைக்கு தேவை பட்டது மனிதர்கள் "பாசம்".
இதோ பிரிய போகிறது என் உயிர் ,
உணவிற்கும், காமத்திற்கும், புகழிற்கும் மட்டுமே வாழ்ந்து முடித்து விட்டேன் .
இல்லை ஓடி முடித்து விட்டேன்.
ஓவ்வொரு மனிதனும் இதற்க்காகவே
இன்னமும் ஓடிகொண்டிருக்கிறான் .
அல்லது ஓடிமுடித்து விட்டான் .
அல்லது ஓட போகிறான்
இதோ எனக்கு பேரன் பிறந்து விட்டதாய் செய்தி
நேரம் மாலை 6:15.
இன்று இரவு எனது மரணம்
நாளையும் அதே விடியல் .

Wednesday, May 12, 2010

சலசலப்பு

மௌனமான அந்த குடிசையில்

சலசலப்பை ஏற்படுத்தும்

அந்த கருவண்டை போல;

என் மனம் மௌனமான தருணங்களில்

உன் நினைவென்னும் சலசலப்பு.


Friday, February 19, 2010

ஈன்ற பொழுதினும் பெரிது வலிக்கும்

அம்மாவுக்கு சீரியஸ் என செய்தி கேட்டு
அவசர விடுமுறையில் வந்த அவளது ஒரேமகன்
உயிர் இழுத்துக்கொண்டு இருப்பதில் கவலையுற்று
இறுதி சடங்கிற்கான செலவை சொந்தகாரகளிடம் கொடுத்து விட்டு
அவசரமாய் பறந்து கொண்டு இருக்கிறான் அந்நிய தேசத்திற்க்கு.

மனசாட்சி

குறையுடன் பிறந்து
சுகமில்லாமல் இருக்கும்
அவன் குழந்தையை
கொன்றுவிடலாம் என்று
பலர் ௬றி அவன் மறுத்தபோதிலும்
தானாகவே இறந்துவிடாத
என்று உள்ளுர அவன் மனம் ஏங்குகிறது
கண்ணீருடன்.

சட்டமா ? பாசமா ?

நோயின் உச்சத்தில்
குற்றுயிருமாய், குறையுயிருமாய்
நாறி கொண்டிருக்கும் தன் தாய்க்கு
தூக்க மாத்திரை கரைத்து
நிரந்தரமாய் தூங்க செய்துகொண்டு இருக்கிறான்
அவளை உணர்ந்த பாசக்கார குற்றவாளி மகன்.

Sunday, January 10, 2010

எங்க பாட்டி செத்து போச்சி !!!


நள்ளிரவு தூக்கத்தை கெடுக்கும் அந்த வறட்டு இருமல் இப்பொழுது இல்லை.

அதிகாலையில் பிடிவாதமாய் அருகே அமர்ந்து தூக்கத்தை கெடுக்கும் தொந்தரவு இல்லை இப்பொழுது.

திண்ணையில் கூட்டம் சேர்த்து அரட்டை அடிக்கும் சத்தம் இல்லை.

வாசலை தாண்டும் ஒவ்வொரு முறையும் பதில் சொல்ல வேண்டிய அவசியம்மில்லை.

பாசத்தை காட்டுவதில் அம்மாவுக்கு போட்டி இல்லை இப்பொழுது.

இளமையாக பேசும் பொழுது அச்சத்துடன் குரலை தாழ்த்த வேண்டிய அவசியம்மில்லை.

பாட்டியை சாக்காய் வைத்து இனி சொந்தகரர்களின் தொந்தரவு இல்லை.

தப்பை தேடி தேடி கண்டு ஏசும் வார்த்தைகள் இல்லை.

ஆனால்,

அவளது பிணத்தை அன்று வீட்டில் இருந்து எடுத்து சென்ற போது

சமையல் அறையில் இருந்து உப்பு தொலைந்து போனது போல் இருந்தது.

இப்பொழுது வாழக்கை சூடாகவும், மணமாகவும் இருந்தாலும்;

உப்பில்லா பண்டம் போல் சலிப்பாகவே உள்ளது .

காற்றின் ஓட்டத்தை குலைக்கும் புல்லாங்குழலின் ஒட்டையாய் அவளை நினைத்திருந்தாலும்;

அவள் இறந்து அதை அடைத்த பின்பு

வாழ்க்கை, சங்கீதம் எனும் பொக்கிசத்தை இழந்து

வெறும் அடுப்பு ஊதும் குழலாய் மாறிப்போனதை உணர ஆரம்பித்திருக்கிறோம் இப்பொழுது.

Friday, January 1, 2010

கல்லறை கோவில்

உடல் கழிவுகளை தற்காலிகமாக நீக்கும் இடம் கழிவறை.
மனக்கழிவுகளை தற்காலிகமாக நீக்கும் இடம் கோவில்.
இவை இரண்டையும் நிரந்தரமாக நீக்கும் இடம் கல்லறை.
கழிவறை, கோவில், கல்லறை;
மூன்றுமே முக்கியம் ஆகிவிட்டது சராசரி மனிதனுக்கு.
தினமும் கழிவறை செல்கிறாய்.
வாரம் ஒரு முறை கோவில் செல்கிறாய்.
குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது
கல்லறைகளுக்கு சென்று சிந்தி ;
உன் வாழ்க்கை புனிதம் பெறட்டும்.

Wednesday, December 30, 2009

நாத்திக குழந்தைகள்

குழந்தை இயேசுவை கண்டு "பாப்பா" என்றும்;
சிவபெருமான் படம் பார்த்து "மாமா" என்றும்;
அடையாளம் காட்டியது என் நாத்திக குழந்தை.
அதட்டியவாறு அது ஆண்டவன் என்றேன் அதனிடம்.
அலட்டிக்கொள்லாமல் அம்மாவின் மடியில் படுத்துகொண்டது.
எனது அறிவு எழுந்து கொண்டது.
அணைத்து மதத்திலும் பிறக்கும் குழந்தைகள் நாத்திகர்௧ளே;
கலங்கிய மனிதர்களின் காற்று படாதவரை .
ஐயோ ! நாத்திக சமுதாயம் உறுவாக நான் காரணியாகி விடகூடாது.
குழந்தையின் நெற்றில் திருநீறு இட்டு கண்மூடி கடவுளை வணங்கி கொண்டேன் .
மீண்டும் என் அறிவு படுத்துவிட்டதா? காஞ்சிபுரம் பெருமாளுக்கே வெளிச்சம் .

Thursday, December 10, 2009

பறவையே எங்கு இருக்கிறாய் ?




என் மரத்தில்
நீ வசித்து சென்ற
௬டு மட்டும் தான் இப்பொழுது.
அதில் நீ உதிர்த்து சென்ற
வெண்பஞ்சு சிறகுகள்
மற்றும் எச்சங்களின் பாரம் தாங்காமல்
எப்பொழுது சரியுமோ?
என் மரம்.

ஆனால், உனது சாலையில்
எனது இரத்தகரைகள் மட்டுமே இப்பொழுது.
நீ கடந்து செல்லும் வேகத்தில் அதை பார்க்க௬ட
நேரமில்லை உனக்கு

மீண்டும் பின்னோக்கி பயணிக்க
கால இயந்திரம் இல்லை எனக்கு
இன்னமும் முன்னோக்கி சென்று சாவைதொட
கால சுதந்திரம் இல்லை எனக்கு
என்னோடு சேர்ந்துவாழ ஏனோ மனம் இல்லை உனக்கு.

இங்கே நானும்,
பறவை பிரிந்து சென்ற பறவை ௬டும்
ஏனோ இருந்து கொண்டு இருக்கிறோம்
பிறர் பார்வைக்கு.

Thursday, December 3, 2009

கள்ள காதல்

சமுகமே !!!
இனி மேல் சொல்லாதிர்கள் " கள்ள காதல் " என்று.
வேண்டுமானால் சொல்லிகொள்ளுங்கள் முதல் காதல் என்று.
அல்லது உண்மையான காதல் என்று.
எங்கே நான் காதலித்தேன் என் வாழ்க்கை துணையை.
நீங்களாக நினைத்துக்கொண்டால் நான் அல்ல பொறுப்பு.

Friday, August 21, 2009

தண்ணீர் ஊற்றியா வளர்த்தோம் இந்த பயிரை ?

என் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய இந்நாட்டில் ;
அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டு காலம் வாழ்ந்து சிறந்த இந்நாட்டில்;
இப்பொழுது,
சில பவுன் தங்கதிற்காக எத்தனையோ கன்னிகள் அடைந்து விடுகிறார்கள் முதுமையை.
அரை ஜான் வயிற்றிக்காக எத்தனயோ கண்ணகிகள் பங்கு போட்டுவிடுகிறார்கள் கட்டிலை.
ஒரு ரூபாய் புது பிளேடில் முடிந்து விடுகிறது எத்தனயோ குடும்பங்களின் தலைபிரசவம்.
நான்கு முழ கயிற்றில் முடிந்து விடுகிறது எத்தனயோ குடும்பங்களும் கூட.
காந்தியின் சுதத்திரம் கலவி கொள்வதிலும்,
நேதாஜி கற்பித்த வீரம்,
சாதி, மத, இன சண்டையிலும் கரைந்து கொண்டிருக்கிறது.
இங்கேதான், தொழில் நுட்ப வளர்ச்சி இமாலயத்திலும்,
கோயில்களின் வருமானம் கோடிகளிலும்.
வறுமைக்கும் செழுமைக்கும் கல்யாணம் நடப்பது எப்போது???
வாழ்க பாரதம் !!! வளர்க இந்தியா!!!

Monday, July 27, 2009

சுடும் உண்மை

கற்பு
மானம்
ஒழுக்கம்
கீதை
குரான்
பைபிள்
மனச்சாட்சி
அத்தனையும் மயிராச்சி
பெத்த குழந்தை வயிறு பசியில பத்தி எரியும் போது.

விதவை


தினம் தினம் என்னை சித்திரவதை செய்தாய்;
மனதாலும் உடலாலும் வேதனை தந்தாய்;
இன்று என்னோடு நீ இல்லை.
உன்னோடு வாழ்வதை விட;
என் கணவன் என்னும் உன் நினைவோடு;
வாழ்வது சுகமாய் இருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ நீ தந்த சில சந்தோசங்களை அசை போட்டுகொண்டே.

Sunday, June 21, 2009

தாய்மையா? தாயா?


பள்ளி ஆண்டு விழாவில்,
இறைவன் எனும் நான்கெழத்து பற்றியான
கவிதை போட்டியில் அவன் எழுதிய இரண்டெழத்து கவிதை
தாய்.
நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்கள் பெற்றோருடன் வந்திருக்க
இவனது தாயோ சிறையில்
விபச்சார வழக்கின்கிழ்.

Saturday, June 6, 2009

இளம் விதவை

உன்னை இழந்து
உன் நினைவிலும், காமத்திலும்
நான் படும் வேதனைகள்
நித்தமும் உடன்கட்டை எனக்கு.

வானம் பார்த்த வீட்டுகாரி

(கள்ள தொடர்பில் கருவுற்ற நடை பாதையில் வாழும் பெண் ஒருத்தி, பிறக்க போகும் தன் குழந்தையை நோக்கி கூறுவது)

நாங்கள் ஒருவரை ஒருவர் இரையாக்கி உண்டதில்
தோன்றிய என் அடிவயிற் று ஜீரணமே !
இனி நீ பூமியில் படப்போகும் வேதனைகளை பட்டியலிடுவேன் கேள்.

நான் அடி வயிறில் ஜீரணித்ததை விட
மேல் வயிறில் ஜீரணித்தது குறைவுதான்
ஆகையால், என் முலையில் நீ வாய்வைத்து உறிஞ்சினால் ஊறப்போவதென்னவோ உன் வாயின் எச்சில் மட்டுமே
சுவைக்காக என் மார்பில் காய்ந்த வியர்வையை அதில் கலந்து கொள்.

இப்பொழுது கிடைத்து கொண்டிருக்கும் ஒருவேளை உணவுக்கும் நாளை உத்திரவாதமில்லை.
உன் அக்காளின் தந்தையை போல்
இப்பொழுது உன்னை எனில் ஊட்டியவனும் ஓடிவிடகூடும்.
பின்பு, கோவில்படிகட்டுகளும் சாலைசந்திபுகளும் நம் தொழில்கூடமாக மாறிவிடக்கூடும்.

மழை பெய்தால் நனைய பழகிகொள்
வெயில் அடித்தால் காய பழகிகொள்
குளிரடித்தால் நடுங்கி கொள்
ஆனால், பசி எடுத்தால் மட்டும் அடக்கிகொள்

நிலவை பார்த்து உறங்கிகொள்
கதிரை பார்த்து விழித்துகொள்
ஏதோ ஒரு விடியலில் இருந்து, உன்னருகே நான் இருக்கபோவதில்லை.

ஆணாக பிறந்து விட்டால், உணவு விடுதியின் எச்சில் சேற்றிலும்
வாகனப் பழுது பார்க்கும் கடைகளில் எண்ணையிலும் அமிழ்ந்து போவாய்.
பெண்ணாக பிறந்து விட்டால், வயது வரும் முன்பே
வயதுக்கு வரவழைக்க படுவாய்.

இதை அனுபவிக்கதானா,என் வயற்றில் துடிப்புடன் காத்திருக்கிறாய்
காம தீயில் பிரிந்த என் சுடரே !

உன் பிஞ்சு கால்களால் என் அடிவயற்றில் உத்தரவிடு இப்பொழுதே.
ஜிரணித்திருந்தாலும் வலுகட்டாயமாக உன்னை வாந்தி எடுத்து விடுகிறேன்.

Saturday, May 30, 2009

அட பொழப்ப கெடுத்த பொட்டபுள்ள !!


நடு சாமத்து ஊத காத்தில்
உறக்கம் கலஞ்ச நீ
கொலுசொலி எழுப்பி என்னை அலைச்சய
ஏத்தா?

அம்மூரு சொக்கனாச்சியம்மன் கொடையில
ஆத்தா காபாத்துன்னு கண்மூடி நா கிடக்க
கோயில் வாசலோரம் நட்ட வாழமரத்து காய்பிடுங்கி
என் மேல விட்டெறுஞ்சி என் கவனம் கலச்சியே
ஏத்தா?

சிவனேன்னு குளிச்சிட்டு
ஒத்தையடி ஆத்தங்கரையில
ஈர வேட்டியை உலத்திகிட்டு நா வரையில
ஆத்துல கல் எரிஞ்சி என் மேனி நனைச்சியே
ஏத்தா?

கரும்பு காட்டுகுள்ள
பூச்சி பொட்டு பட்டுரும்ன்னு
கவனமா தண்ணி பாக்கையில
தலை நிறைய பூ வச்சி
என்னை இழுத்து உன் தனம் மேல போட்டயே
ஏத்தா?

கண்ணாலம் முன்னால கை வைச்சா தப்புன்னு
இரவைக்கு தோட்ட காவலுக்கு நான் போக
பின்னாலையே வந்து
உன் தவாணியில பாய் விரிச்சியே
ஏத்தா?

உச்சி வெயிலு மண்டைய பொளக்குதுன்னு
அம்மூரு சுடுகாட்டு ஆலமரத்துகடியில
ஆட்டோட உன் நினைப்பில் நா கிடக்க
அரவமில்லாம அசலுரூ மாப்பிள்ளை கூட
குலுங்குற கூண்டு வண்டியில
உன் உசிரை குலுங்காம புடிச்சிகிட்டு
குனிச்ச தல நிமிராம
குணவதியா போறியே
ஏத்தா?

Saturday, April 11, 2009

என்னை ஏன் மணந்தாய் என் தலைவா ???

என் தலைவா !!! உன்னை காணாமல்

பசலை நோய் வரவில்லை...

வளையல் கை நழுவி ஓடவில்லை......

சோலைவனம் பாலைவனம் ஆகவில்லை...

என் கனவில் எப்போதும் நீ வரவில்லை....

நீ அனுப்பும் பணக்கட்டுகளும் மகிழ்ச்சி தரவில்லை....

ஆடிக்கு என்னை அழைத்து போக என்அம்மாவும் வரவில்லை....

உன்னை பற்றி விசாரிப்பவர்களிடம் பதில் சொல்ல மனமில்லை...

திருமணம் முடிந்து முதல் ஒருமாதம் நீ முகம் கொடுத்து பேசவில்லை...

மறுமாதம் உன் பெருமை பற்றியை சிலாகித்தாய்...

மூன்றாம் மாதம் மூன்றடி பெட்டியுடன் பறந்து விட்டாய் அயல்தேசம்...

வருடமும் ஓடி விட்டது இன்றோடு.

ஏனோ! உன் தாலி கூட என் கழுத்தை உறுத்துகிறது இரவெல்லாம்.....

மனதை விட என் உடலுக்கு துணை தேடுகிறது இப்போது.

என் உடல் திரியில் நீ காமத்தீ ஏற்றி விட்டு சென்று விட்டாய்....

எனனயே நினைத்து இன்னமும் ஏங்கும் அவன்

அதற்க்கு எண்ணை ஆகி விடுவானோ என்ற பயம் உயிர் கொல்கிறது.

என்னை அலங்கரிக்க வேண்டாம்! என் தலைவா!!

சீக்கிரம் வந்து என்னை அணைத்து கொள்.

நீ காலம் தாழ்த்தி வரும் முன்பு ...

நானும் அவனும் காற்றில் கலந்திருப்போம்.

எஞ்சிய கரியை நீ பூசிக்கொள் உன் முகத்தில்.

நீ கொண்டுவரும் டாலர்களை குவித்தாலும்

மீண்டும் திரியாகாது கரி.

Monday, April 6, 2009

மனிதர்கள் இங்கே

தனித்தன்மை இல்லாத தரம்கெட்ட மனிதர்கள்;

சிந்துகிற ஒவ்வொரு சொல்லுக்கும் லாபம் எதிர் பார்க்கும் மனங்கள்;

சோறுக்காக பயப்படும் சாறு அற்ற உடல்கள்;

பணத்துக்காக மானத்தை நாசூக்காக விற்பவர்கள்;

தன்னைவிட எளியவரிடம் அதிகாரம் செலுத்தி சந்தோஷ படுபவர்கள்;

தன்னை விட வலியவரிடம் வளர்ப்பு நாயாய் அடங்கி விடுபவர்கள்;

புழுவாய் படைக்கப்பட்டு பரிணாமம் பெற்ற மனிதர்கள் இவர்கள்;

ஆடுகள் எல்லாம் கூடி சிங்கத்தை கேலி செய்யும் சமுதாய கோட்பாடுகள்;

தேடிசோறு நிதம் தின்று மறயபோகும் மடையர்கள்;

இதில், சாக்கடையில் விழுந்து விட்டோம் என வருத்தப்பட வேண்டாம் வைரங்களே.

காலம் வரும்.

உன் காலமும் வரும்.