
இரவு நேரங்களில் அவளை காண முடியாது.
பகலில் மட்டுமே எனது காதல் சொல்ல நேரம் உண்டு.
அவள் பெயர் "விபச்சாரி" மற்றவர்களுக்கு.
என் உயிரை ஆள்வதால்,
எனக்கு " ஆண்டாள்" அவள்.
என்னால் சுவாசிக்காமல் இருக்க முடிவதில்லை; என்னால் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை; என்னால் இரக்கப்படாமல் இருக்க முடிவதில்லை; என்னால் ரௌத்திரம் தவிர்க்க முடிவதில்லை; என்னால் சிந்தன்னை செய்யாமல் இருக்க முடிவதில்லை; ஆகையால், என்னால் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
ஆலயம் சென்று இறைவனை வழிபட தேவை இல்லை எனக்கு.
நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அமர்ந்து வழிபட்டு கொள்வேன்.
அறையில் குளிப்பதை விட ஆற்றில் குளிப்பது பிடிக்கும் எனக்கு
ஆற்றில் குளிப்பதை விட மழையில் நனைவது பிடிக்கும் எனக்கு
என் உடம்பின் கழிவுகள் நீங்கி விட்டால்
காற்றில் கலந்துள்ள நீரில் நனைத்து கொள்வேன் என் உடம்பை.